கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக நிர்வாகியுமான பக்கிரி சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மேட்டு காலனியில் வசித்து வருபவர் பக்கிரி சாமி. திமுக நிர்வாகி ஆன இவர் அங்குள்ள நகராட்சி மன்றத்தின் 30 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார் இவரது பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் யுகேஜி மாணவி ஒருவர் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று இருக்கிறார் மேலும் சிறுமியின் ஆடையில் ரத்தக்கரைகளும் இருந்துள்ளன. இதனை கவனித்து சிறுமியின் தாய் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். காவல்துறையினரும் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கினார். அந்தப் பள்ளியில் பாடம் எடுக்கும் ஆசிரியைகள் எல்லாம் பெண் ஆசிரியைகள் என்பதால் தலைமை ஆசிரியர்களிடமிருந்து விசாரணையை துவக்கினர். தலைமை ஆசிரியரின் படத்தை குழந்தைக்கு காட்டிய போது அந்த குழந்தை அழுது துடித்தது. இதன் மூலம் குற்றவாளி யார் என காவல்துறைக்கு தெரிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பக்கிரி சாமியை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.