fbpx

18 வயது இளம்பெண்ணை சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்திய திமுக எம்எல்ஏ மகன்..!! அண்ணாமலை பரபரப்பு புகார்..!!

18 வயதே ஆன பட்டியல் சமூக இளம்பெண்ணை கடுமையாக தாக்கியும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்திய திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, கொடூரமாகத் தாக்கியிருப்பது திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

"ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரை.." மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.! - சுகாதாரத் துறை அமைச்சகம்.!

Thu Jan 18 , 2024
ஆன்ட்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவது பல்வேறு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அதிகமாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக புதிய எச்சரிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அதற்கான காரணம் அறிகுறிகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றையும் மருந்து சீட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற புதிய நெறிமுறையை […]

You May Like