பெண்கள் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க.. திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுவதன் மூலம் மும்முனை போட்டிக்களமாக வேலூர் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நேற்று தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். வாக்கு சேகரிக்கும் இடத்தில் இருந்த பெண்களை பார்த்து,,. மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா என கூறினார்.
முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத் தொகையில் தான் பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசிய வீடியோ தற்பொழுது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பொன்முடி மகளிர் எல்லாம் ஓசி பேருந்தில் தான் போகிறீர்கள் என பேசியது சர்ச்சையான நிலையில்,. தற்போது எம்பி கதிர் ஆனந்த் பேசியது திமுகவிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.