ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் போவதாக அறிவித்தார். அறிவித்ததை போலவே சொத்து பட்டியல்லை வெளியிட்டதுடன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாயில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அந்த பட்டியலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், கனிமொழி,டி ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கலாநிதி மாறன், ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட காரணத்தினால் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் மான நஷ்ட வழக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.