fbpx

திமுக ஊழல்!… 4வது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!… காங்கிரசின் தலையீடு அம்பலம்!

தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ள 4வது ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு இருந்தார். பிறகு கடந்த 17ம் தேதி, 2வது ஆடியோ எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிய ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். ஜன.,27 ல் ஆ.ராசா மற்றும் ஜாபர்சேட் பேசும் 3வது வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் அண்ணாமலை 4வது ஆடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ரெய்டு பற்றிய தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்படலாம். மாற்றப்படலாம். 2ஜி ஊழலில் தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமியின் பெயரை முழுவதும் மூடி மறைப்பதில் காங்கிரசின் தலையீடு அம்பலம் ஆகி உள்ளது. இது போல் மேலும் ஆடியோ வெளி வரும் என்று அந்த வீடியோவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Kokila

Next Post

நிர்மலாவை குறுக்கிட்ட பிரதமர் மோடி!… பதற்றமடைந்த பாஜக நிர்வாகிகள்!… தேசிய கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பு!

Sun Feb 18 , 2024
டெல்லியில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கவுன்சிலால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பெரும் பரபரப்படைந்தனர். மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழ்நாடு […]

You May Like