fbpx

பாஜகவினர் ஷாக்! அமர் பிரசாத் ரெட்டிக்கு பெயில் கூட கிடைக்காது!…

கொடிக்கம்பம் அகற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற தொடர் விடுமுறையால் வரும் 29ம் தேதிவரை ஜாமீன் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில், வெளியில் 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அனுமதி பெறாமல் வைத்த இந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என பனையூர் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் கொடிக் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றபோது, பாஜகவினர் கிரேன் வாகன கண்ணாடியை உடைத்துவிட்டனர்.

கிரேன் வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவினர் கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கானாத்தூர் காவல்துறையினர் 5 பேரைக் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொடிக் கம்பத்தை அகற்ற இடையூறு செய்த பாஜகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து வைத்துள்ளனர். தற்போதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டியும் கைது செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மெஜிஸ்திரேட் வர்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 6 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழ்நாடு பாஜகவில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவரும், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வலதுகரமாக கருதப்படுபவருமான அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு, குறைந்தது இன்னும் 10 நாட்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும், அதுவரை அவர் புழல் சிறையிலேயே இருக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால், அமர் பிரசாத் ரெட்டி இன்று திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என பாஜக நிர்வாகியான கார்த்திக் கோபிநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

Kokila

Next Post

சுவாசிக்கும்போது நெஞ்சு வலியா?… இண்டர்கோஸ்டல் தசை திரிபு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

Sun Oct 22 , 2023
சுவாசிக்கும்போது நெஞ்சில் திடீரென வலியை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? வலியால் மூச்சுவிட சிரமமாக உள்ளதா? ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், கேர் ஹாஸ்பிடல்ஸ், ஜெனரல் மெடிசின் ஆலோசகர் மருத்துவர் ஜி சினேகா விளக்கமளித்துள்ளார். அதிக எடை தூக்குவதால் சில நேரங்களில் இண்டர்கோஸ்டல் தசைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் இந்த தசைகள் தான் மார்பை உறுதிப்படுத்தவும் சரியாக சுவாசிக்கவும் உதவுகின்றன. இப்பகுதியின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக தசை விகாரங்கள் பொதுவாக தோன்றும். வழக்கமாக […]

You May Like