Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் கூட்டணி பங்கீடுகளில் இறுதிக்கட்ட நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுகா ஆகிய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதிமுகாவுக்கு ஏற்கனவே 1 தொகுதி என ஒப்பந்த செய்யப்பட்ட நிலையில், மதிமுகாவுக்கு திருச்சி தொகுதி தற்போது ஒதுக்கீடு செய்பட்டுட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்து. இந்த திருச்ச்ய் மக்களவைத் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துறை வைகோ போட்டியிடுவார் எனத் தகவல். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதி இந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கீடு.
இந்நிலையில் திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை என்று பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்:
- வடசென்னை
- தென்சென்னை
- மத்தியசென்னை
- ஸ்ரீபெரம்புதூர்
- அரக்கோணம்
- காஞ்சிபுரம்
- ஆரணி
- கோவை
- பொள்ளாச்சி
- ஈரோடு
- பெரம்பலூர்
- வேலூர்
- தருமபுரி
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நீலகிரி
- தேனீ
- தஞ்சை
- தூத்துக்குடி
- தென்காசி