fbpx

’இதுவரை பார்க்காத வரலாற்று தோல்வியை திமுக சந்திக்கும்’..!! ’தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’..!! எல்.முருகன் பரபரப்பு பேட்டி

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளர்.

நாமக்கல்லில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நமோ இலவச நீட் மற்றும் போட்டித் தேர்வு மையத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருவதாகவும், நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது நாமக்கல்லைச் சேர்ந்தவர் தான் திமுகவின் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்ததாகவும் கூறினார். அப்போது ஏன் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை..? 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். அந்த தேர்தல் முதல் திமுக காணாமல்போகும்.

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி. 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மத்திய அரசுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதனால், தமிழ்நாட்டின் வளர்ச்சியை அவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கருணாநிதி உட்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனர்” என்று தெரிவித்தார்.

Read More : ’அதிமுக என்னிடமும் பேரம் பேசியது’..!! ’துணை முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள்’..!! சீமான் பரபரப்பு பேட்டி

English Summary

Union Minister of State L. Murugan has said that the DMK will face a huge defeat in the 2026 assembly elections.

Chella

Next Post

’ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரியாம 3 வருஷமா அந்த மாதிரி இருந்தோம்’..!! ‘என் வாழ்க்கையே போச்சு’.!! கைதாகிறார் நடிகர் காதல் சுகுமார்..?

Sat Apr 19 , 2025
As the investigation into the case has intensified, the police are planning to question Kadhal Sukumar.

You May Like