fbpx

’திமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது’..!! ’செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்னால் போக முடியாது’..!! சசிகலா பரபர பேட்டி..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார் சசிகலா. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா, “எம்.ஜி.ஆரின் வளர்ச்சி திமுகவில் இருக்கும் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவர் வெளியேறினார். எம்ஜிஆர், மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். முதலமைச்சர் என்றால் 10 வாகனங்களுக்கு மத்தியில் செல்வது அல்ல, அதற்கு பெயர் முதலமைச்சர் அல்ல, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அம்மா உணவகம் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன்.

நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. நான் என்றைக்கும் தொண்டர்களின் பக்கம் தான் இருப்பேன். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் திமுக ஒரு சீட் வர முடியாது என்று அத்தனை தொண்டர்களும் சொல்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதை செய்து காட்டுவேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தூள்..! உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு...!

Thu Jan 18 , 2024
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் 2023, நவம்பர் வரை ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது இது ரூ.8.61 லட்சம் கோடி உற்பத்தி / விற்பனைக்கும், 6.78 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு (நேரடி மற்றும் மறைமுக) உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது. பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, மருந்துகள், உணவு பதப்படுத்துதல், தொலைத்தொடர்பு, கட்டமைப்பு போன்ற துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் இத்திட்டங்கள் ரூ.3.20 லட்சம் கோடியைத் கடந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, […]

You May Like