தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள 12 கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திமுக, ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளின் பணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2020-2021 நிதி ஆண்டில் பெருமளவிலான பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு சென்ற புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் உள்ள ஆளும் கட்சிகள் வருமான வரித்துறைக்குள் கொண்டுவரப்பட்டன.
அரசியல் கட்சி நிர்வாகிகளின் வங்கி கணக்குகள் என சந்தேகிக்கப்படும் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் கூட்டுறவு வங்கியில் அதிக பணம் வைத்திருந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர், மற்றொரு நபரை கைகாட்டி உள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அது அரசியல் கட்சிகளின் கருப்பு பணம் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் அதிகப்படியான பணம் செலுத்தப்பட்டிருப்பது திமுகவினரின் வங்கி கணக்குகள் என்றும் ஆந்திராவில் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரின் பணம் என வருமான வரித்துறை கருதுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியுள்ளதால் இரு அமைப்புகளும் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கருப்பு பணத்தை கூட்டுறவு வங்கி மூலம் வெள்ளை பணமாக மாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.
Read More : தமிழகத்தை மிஞ்சும் அறிவிப்பு..!! மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500..!! விவசாய கடன்கள் தள்ளுபடி..!!