கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு உள்ள தொடர்பை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற விபரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார் .
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த கட்சி தீவு விவகாரத்தில் என்னென்ன துரோகங்களை செய்வது என்ற விவரத்தை நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். இந்த நிலையில் இன்று இரண்டாம் பகுதி வெளியிட உள்ளார். இதில் கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேச உள்ளதாக கூறினார்.
கச்சத்தீவு 1976 இல் தாரைவார்க்கப்படுவது குறித்து 1974 ஆம் ஆண்டே கருணாநிதிக்கு தெரியும். கச்சத்தீவு குறித்து பொய் செய்திகளை பரப்பி வரும் திமுக இதற்கு பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் உடன் சேர்ந்து கச்சத்தீவை கொடுத்துவிட்டு பிறரை குறை கூறி வருகிறது திமுக என்றார்.