கனமழை காலங்களில் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருந்த நிலையில், இதற்கு பிரதீப் ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலச்சந்திரன், தரவுகளை வைத்து வானிலை பற்றி பேசுவதும், புகழுக்காக பேசுவதும் வேறுவேறு எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் பேச்சுக்கு சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாங்கும் ஊதியத்திற்கு சரியாக பணி செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
ஆனால், அதை சிறிது நேரத்திலேயே எடிட் செய்த அவர், “ஃபெஞ்சல் புயல் மற்றும் 2023இல் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான விவகாரங்களில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் தவறானது குறித்து விசாரணை நடத்த மக்கள் வலியுறுத்த வேண்டும். நமது வரிப்பணத்தையே அவர்கள் ஊதியமாக பெறுகிறார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Read More : விஜய் கட்சியில் ஐக்கியமாகும் ஆதவ் அர்ஜுனா..!! தவெகவின் புதிய தேர்தல் ஆலோசகர் இவர் தானாம்..!!