fbpx

டீயுடன் இந்த ஸ்நாக்ஸ்களை சேர்த்து சாப்பிடாதீர்கள்!… ஏன் தெரியுமா?… ஆபத்து!

டீயுடன் பக்கோடா, இனிப்புகள், சமோசா மற்றும் கச்சோரி போன்ற ஸ்நாக்ஸ்களை சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

காலை எழுந்தவுடன் எத்தனை பேருக்கு ஒரு கப் டீ குடித்தால்தான் நாளே தொடங்குகிறது? சிலருக்கு மாலை நேரங்களில் சுடசுட ஒரு கப் டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது பிடித்தமானதாக இருக்கும். இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் ஒன்று டீ. பெரும்பாலானோர் டீயுடன் பிஸ்கட் மற்றும் சாண்ட்விட்ச் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவர். சிலர் பக்கோடா, இனிப்புகள், சமோசா மற்றும் கச்சோரி போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை விரும்புவர். தனது சிறந்த சுவையை தாண்டி, டீயில் நிறைய ஆரோக்கியங்களும் இருக்கிறது. ஆனால் அவற்றை சில ஸ்நாக்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் கூழ்வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. டீயில் டான்னின்ஸ் மற்றும் ஆக்சலேட்டுகள் நிறைந்திருப்பதால் இவை உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இருப்பினும் இதனை பால் டீயுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. உடல் எடையை குறைப்பதில் லெமன் டீ மிகவும் பிரபலமானதாக பார்க்கப்பட்டாலும், நேரடியாக டீ இலைகளை, எலுமிச்சையுடன் சேர்ப்பது அதீத அசிடிட்டி, ஏப்பம் மற்றும் எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே காலை வெறும் வயிற்றில் லெமன் டீ குடிக்கவேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் இதனை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர். டீ – பக்கோடா காம்பினேஷன் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இந்த சுவையான மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை டீயுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கக்கூடியது. பெரும்பாலான இந்திய ஸ்நாக்ஸுகள் கடலை மாவை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. கடலை மாவானது ஊட்டச்சத்துகளை ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கின்றன. இதனால் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

ஐஸ்க்ரீம் போன்ற ஜில் உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது அறை வெப்பநிலையில் இருந்தாலும்கூட சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இந்த தீங்கு விளைவிக்கக்கூடிய காம்பினேஷனானது செரிமான செயல்முறையை பெரிதளவில் பாதிக்கும் என்கின்றனர். வெவ்வேறு வெப்பநிலை உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது செரிமான மண்டலத்தை பலவீனமாக்குவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே சூடான டீ அல்லது காபி குடிப்பதற்கு கிட்டத்தட்ட 30 – 45 நிமிட இடைவெளியில் குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர்.

இந்தியாவில் சிறந்த மசாலா உணவுகளில் ஒன்று மஞ்சள். இது ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க உதவுகிறது. எனினும் இதனை டீயுடன் சேர்த்து சாப்பிடுவது என்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தி வயிற்றின் உட்புறங்களை அரித்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். உடலுக்கு பலத்தையும், ஊட்டச்சத்தையும் அளிப்பதில் நட்ஸ்களின் பங்கு அளப்பரியது. ஆனால் இதனை டீயுடன் சேர்ப்பது நல்லதல்ல. வறுத்த வேர்க்கடலை, மசாலா முந்திரி அல்லது சால்ட்டி பிஸ்தா போன்றவை சிறந்த நொறுக்குத்தீனிகளாக பார்க்கப்பட்டாலும், இவற்றில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் பால் மற்றும் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

Kokila

Next Post

நெஞ்சு வலியால் பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார்...!

Sun Jun 4 , 2023
கன்னட நடிகர் நிதின் கோபி நெஞ்சு வலியால் காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார். அவருக்கு வயது 39. தனது குடியிருப்பில் வசித்து வந்த நிதின் கோபிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பல நன்றி வளமானார். நடிகர் பெங்களூரில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நிதின் கோபியின் […]

You May Like