பொதுவாகவே, உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு சுவையை கொடுப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகின்றன. அதுவும் சில மசாலாக்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால், அவை அனைத்தும் முதலில் பலனளித்ததாகத் தெரிந்தாலும், அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, செரிமான அமைப்பையும் சீர்குலைக்கிறது. அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத மசாலாப் பொருட்கள் எவை என்று பார்ப்போம்.
வெந்தயம்: இது எடை இழப்பு, தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. மேலும், இது வயிற்றை சுத்தப்படுத்தும். இருப்பினும், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். மேலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது தவிர, வயிற்றின் கீழ் பகுதியில் வலி உண்டாகும்.
கருப்பு மிளகு: இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது மற்றும் உணவின் சுவையையும் அதிகரிக்கும். இது சளி மற்றும் இருமலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடலை பாதிக்கும்.
இலவங்கப்பட்டை: பொதுவாகவே, இது அனைவரது வீடுகளிலும் இருக்கும். இது உணவின் சுவையை அதிகரிக்கும். சமையலைத் தவிர, இது அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக தேநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை அளவுக்கு மீறி உட்கொண்டால் கல்லீரல் பாதிப்படையும். அதிகமாக பயன்படுத்தினால் அலர்ஜி, வாய் புண், முகத்தில் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படும்.
ஓமம்: வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது எடை இழப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு சூடான மசாலா என்பதால், அதை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கோடையில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.
Read More : உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா..? அதை எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பது தெரியுமா..?