நாளுக்குநாள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறலாம். மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது, மோசமான உணவுப் பழக்கம், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தினமும் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, ரசாயன மாசுபாடு, மலச்சிக்கல், உடற்பயிற்சி செய்யாமை என புற்றுநோய்க்கான காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.
பெருங்குடல் வாய்ப்பகுதியில் வால் போன்று உறுப்பு ஒட்டிக் கொண்டு இருப்பதே அப்பெண்டிக்ஸ் எனும் குடல் வால் நோய் ஆகும். இதுதான் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும். அப்பெண்டிக்ஸ் உருவாகும் கட்டி ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் நமக்கு தெரியப்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இறுகிய மலம், உடல் எடை குறைதல் மற்றும் அடிவயிற்றின் வலது ஓரத்தில் வலி உண்டாகும். புற்றுநோய் பரவத் தொடங்கினால் குடலிறக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
இன்றைய காலத்தில் அனைவருமே துரித உணவுகளையும் பாக்கெடில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட உணவுகளையே அதிகமும் சாப்பிடுகிறார்கள். இது சுவையாக இருந்தாலும் நம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிவப்பு இறைச்சி, அதிகப்படியான குடிப்பழக்கம், அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் புற்றுநோய் வரும் ஆபத்து 45% அதிகரிக்கிறது. ஆகவே நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தாலே புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். உதாரணமாக மோசமான உணவுப்பழக்கத்தை கைவிடுங்கள், உடல் எடையை குறையுங்கள், நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள்.