fbpx

இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீர்கள்!… விஷமாக மாறும் ஆபத்து!

குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால்
பல்வேறு நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிறது.

நம் குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் விரும்பும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ், புலாவ் ரைஸ் போன்ற நாக்கில் எச்சில் ஊரும் பலவிதமான உணவுகளை வாங்கி கொடுக்கிறோம். குழந்தையாக அதற்கு அடிமையாகி வளர வளர அந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். துரித உணவுகளில் மோனோசோடியம் குளுட்டோமேட் எனப்படும் உப்பானது அதிகளவில்
சேர்க்கப்படுகிறது. இது இளமைப் பருவத்தில் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் நரம்புக் கோளாறுகளும் ஏற்படும்.

இந்த துரித உணவுகளை இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அது விஷமாக மாறி உடலில் அதிகளவு கேடு விளைவிக்கும். இதுபோன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிட பெற்றோர்கள் கொடுத்தால் மாதத்துக்கு ஒருமுறை பகல் வேளையில் கொடுக்கலாம். பிரைட் ரைஸ் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கவே கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

e-kyc அப்டேட் கட்டாயம்...! இல்லை என்றால் சிக்கல்...! பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Wed May 3 , 2023
சேலம் மாவட்டத்தைச்‌ சேர்ந்த மாணவ, மாணவியர்கள்‌ அஞ்சல்‌ துறையின்‌ மூலம்‌ ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கிக்‌ கணக்கினைத்‌ துவங்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம்‌ மாவட்டத்தில்‌ 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியாபோஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌, பள்ளிகளிலேயே ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி […]

You May Like