fbpx

ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யாதீர்கள்!… மாணவர்களுக்கு வேண்டுகோள்!

மாணவர்கள் தங்களது ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட் கடந்த ஜூலை 31ம் தேதிமுதல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஒரிஜினல் மார்க் சீட்டை பாதுகாப்பு காரணங்களுக்காக பலரும் அதனை லேமினேஷன் செய்கின்றனர். இதுபோன்ற செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், பிற்காலத்தில் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும் என்பதால் மதிப்பெண் சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?… ரயில்வேயில் 790 காலிப்பணியிடங்கள்!… வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Sun Aug 6 , 2023
தெற்கு ரயில்வேயில் ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager பணிகளுக்கென 790 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது பதவியின் பெயர்: ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager,காலிப்பணியிடங்கள்: 790.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, டிப்ளமோ […]

You May Like