ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை என்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை என்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லை என்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
SMS மூலம் பொருட்கள்…
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. TNePDS செயலி மூலம் கடைகளில் எவ்வளவு இருப்பு உள்ளது, நாம் எவ்வளவு பொருட்கள் வாங்கி உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அது போல ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள PDS என டைப் செய்து இடைவெளி விட்டு 101 என டைப் செய்து 97739 04050 என்ற எண்னுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் இடைவெளி விட்டு 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்துள்ளதா இல்லையா என அறிந்துக் கொள்ளலாம்.