fbpx

விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்யக்கூடாது.. போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை..

கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வாகன நம்ப ர்பிளேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டாம் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல வாகனஓட்டிகள் தங்களது விருப்பத்துக்கேற்ப நம்பர் பிளேட்டுகளில் படங்கள், ஸ்டிக்கர்களை ஒட்டுதல், பலவித வடிவங்களில் எழுத்துகளைப் பதிவிடுதல் என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுகின்றனர். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்களை எழுதியிருக்க வேண்டும். இந்த நிலையில், சட்டவிதிகளுக்கு முரணாக விதிகளை மீறி வாகனநம்பர் பிளேட்டுகளை தயாரித்து விற்கும் கடைகளுக்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்..

சென்னையில் 138 வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, நம்பர் பிளேட்டுகளுக்கான விதிமுறைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி அறிவுறுத்தினர். மேலும் கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வாகன நம்பர்பிளேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.. சென்னையில் புதுப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Maha

Next Post

ஏப்ரல் 20-ம் தேதி.. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்தியாவில் பார்க்க முடியுமா..?

Fri Mar 10 , 2023
2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் அடுத்த மாதம் 20-ம் தேதி நிகழ உள்ளது.. சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு […]

You May Like