fbpx

மாணவர்களே உதவித்தொகை வேண்டுமா..? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அதன்படி, தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 3ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை மற்றும் பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்தாண்டு புதுப்பித்தல் இணையதள முகவரியில் மாணவர் உள்ளீடு சென்று ஆதார் எண் நடித்த சுயவிவரத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்பட்டால் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை மாணவர்கள் அணுகலாம். எனவே, கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை இன்று அக்டோபர் 18 முதல் நவம்பர் 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடுத்த அதிர்ச்சி..!! பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு நேர்ந்த கதி..!! ஈரோட்டில் பெரும் பரபரப்பு..!!

Wed Oct 18 , 2023
ஈரோட்டில் பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் நிறுவனத்தில்பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் 4 வயது மகள் தர்ஷினி ஆகியோர் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்து விட்டு வீடு […]

You May Like