உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் சில அறிகுறிகளை நீங்கள் கவனிக்காமல்விட்டால் கடுமையான பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும்.
பொதுவாக உடலுறவுக்குப் பிறகு தலைவலி ஏற்படுவது இயல்பானது தான், ஆனால் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு அவர்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தேசிய தலைவலி அறக்கட்டளையின் கூற்றுப்படி, உடலுறவின் போது உடல் உற்சாகமாக இருக்கும்போது, தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் சுருங்குவதற்கு காரணமாகிறது, இது தலைவலியைத் தூண்டுகிறது. ஆகையால் அடிக்கடி உடலுறவின்போது தலைவலி ஏற்பட்டால் அதை சற்று ஒதுக்கி வைப்பது நல்லது.
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அது சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உடலுறவின் போது அதிகமாகலாம். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உடலுறவின் போது மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், இருமல், தும்மல் போன்றவை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்பில் எரியும் உணர்வு, வலி அல்லது அரிப்பை உணர்கிறீர்களா? உடலுறவுக்குப் பிறகு ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்களுக்கு UTIஐ இருக்க வாய்ப்பு உள்ளது. உடலுறவுக்குப் பிறகு சரியான சுகாதாரத்தைப் புறக்கணிப்பது UTIஐ பெற வழிவகுக்கிறது.