fbpx

’இலவசங்களை வழங்கும் முன் இதை செய்ய வேண்டும்’! ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை! – நிதியமைச்சர்

இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்ல பூஜ்யமளவிற்கு கூட வாய்ப்பில்லை என்றும் மாறாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டு இலக்கங்களில் வளர்ச்சி காணும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், பொருளாதாரத்தை இரண்டு இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும், நாம் உண்மையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக திகழ்கிறோம் என்றும் தெரிவித்தார்.

’இலவசங்களை வழங்கும் முன் இதை செய்ய வேண்டும்’! ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை! - நிதியமைச்சர்

எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பிறகு, வரி வருவாய் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் அதன் நிதி நிலைமையை மதிப்பீடு செய்து, இலவசங்களை வழங்குவதற்கு முன் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 13.5 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்ற நிதியாண்டின் (2021-22) முதல் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவிகிதமாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.

Chella

Next Post

Swiggy Instamart..! ஆணுறை விற்பனையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது தெரியுமா?

Sun Sep 4 , 2022
மும்பையில் இன்ஸ்டாமார்ட் மூலம் ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி தனது ’இன்ஸ்டாமார்ட்’ தளத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது. கடைக்குச் சென்று மளிகைப் பொருள்கள் வாங்கும் சுமையைத் தவிர்த்து தள்ளுபடிகள் அதிகம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாமார்ட் […]
புத்தாண்டு கொண்டாட்டம்..!! சாதனை படைத்த பிரியாணி..!! சைலண்டாக விற்பனையான காண்டம்..!!

You May Like