நம்மில் பலர் ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவது உண்டு. ஆனால் அந்த எண்ணெய்யை சமையலுக்கு தாளிக்க அல்லது அப்பளம் பொறிக்க இதற்க்கு மட்டுமே பயன்படுத்துவது உண்டு. ஏனென்றால், பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதில் உள்ள கொழுப்புக்கள் நம் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்குவதோடு, உடலில் பித்தத்தை அதிகரிக்கும். அதிக எடை, கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்த கூடாது. குறிப்பாக, இதய பிரச்சனை உள்ளவர்கள் இதை ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது. ஆனால், தற்போது உள்ள சூழலில் கடையில் வாங்கும் எண்ணெய் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அது கட்டுப்பிடியாகாது. இதனால் அந்த எண்ணெயை எப்படி ஆரோக்கியமான முறையில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில், மிதமான சூட்டில் அடுப்பை வைத்து, ஒரு இரும்பு சட்டியில் எண்ணெய் ஊற்றுங்கள். பின்னர், புளியை உருண்டையாக எடுத்து கொண்டு அதன் நடுவில் கல் உப்பை வெளியில் வராதபடிக்கு நன்கு உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த புளியை வடை போல உங்கள் உள்ளங்கையில் தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் போட வேண்டும். பின்னர் சிறிது நேரத்தில், ஒரு சின்ன துண்டு இஞ்சியையும் அந்த எண்ணெயில் போட வேண்டும். எண்ணெய் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் சூடாகட்டும். எண்ணெயில் பொறிந்து கொண்டிருக்கும் புளி மற்றும் இஞ்சி அடங்கிய பின்னர், எண்ணெய்யை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். எண்ணெய் ஆறிய பின் அவற்றை வடிக்கட்டிவும். இப்போது பாமாயில் எண்ணெய்யில் உள்ள பித்தம் எல்லாவற்றையும் புளி மற்றும் இஞ்சி உறிஞ்சி எடுத்திருக்கும். இப்போது இதனை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.