இரவில் தூங்கும் போது தொப்புளில் எண்ணெய் விடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நமது உடலின் மையப் புள்ளி தொப்புள். இது 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகளின் பிணைப்பில் காணப்படுகின்றது. தொப்புளுக்கும் உடலின் ஏனைய பாகங்களுக்கு தொடர்பு உண்டு. இவ்வாறு விளங்கும் தொப்புளுக்கு இரவில் எண்ணெய் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அதன்படி, தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்றவை நீங்கி கண் பார்வை தெளிவாகும் . உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பு குணமாகும். சருமம் பளப்பளக்கும், உதடு வறட்சி மறையும், தலைமுடி ஆரோக்கியமாக வளரும். முழங்கால் மற்றும் மூட்டு வலி குணமாகும், கால் நரம்புகள் புத்துணர்ச்சியடையும், மூட்டு, கால் வலிகள் குணமாகிறது
மேலும், தொப்புளில் எண்ணெய் விடுவதால் உடல் நடுக்கம் தீரும், சோர்வு அடையாமல் இருக்க உதவும். கர்ப்பப்பை வலுப்பெறும், உடல் சூடு குறையும், நல்ல தூக்கம் வரும். பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள்: தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், எலுமிச்சை எண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்டவைகளை தொப்புளில் விடுவதால் பல நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்.