fbpx

அடுப்பிற்கு பின்னால் இருக்கும் எண்ணெய் கறையை, சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்..

தாங்கள் இருக்கும் வீட்டை சுத்தமாக பளிச்சென்று வைத்து கொள்ள வேண்டும் என்பது பலருக்கு ஆசை. ஆனால் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டால், அந்த நாள் முழுக்க செலவாகிவிடும். நம் வீட்டில் உள்ள ஒரு சில இடங்களில் சுத்தம் செய்வது சற்று கடினம். அதிலும் குறிப்பாக, நமது சமையல் அறையில் அடுப்பிற்கு பின்னல் இருக்கும் டைல்ஸ்களில் படிந்திருக்கும் எண்ணெய் கறையை சுத்தம் செய்வது சவாலான காரியம்.

பிசுபிசுப்புடன் ஒட்டி இருக்கும் அழுக்குகள், என்ன செய்தாலும் போகாது. அந்த ஒரு பகுதியை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பாதி பொழுது செலவாகிவிடும். அப்படி நீங்களும் அடுப்பிற்கு பின்னல் இருக்கும் டைல்ஸ்களில் படிந்திருக்கும் கரையை போக்க சிரமப்படுகிறீர்களா?? இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் செய்து பாருங்கள்..

இந்த கரையை போக்க, பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உடன் சிறு துளி எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஸ்கிரப்பர் பயன்படுத்தி சுவரில் நன்றாக தேய்த்துவிடுங்கள். பின்னர் அதனை தண்ணீர் கொண்டு கழுவி விட்டு, ஈரத் துணியால் துடைத்து விடுங்கள். இப்போது உங்கள் சமையல் அறை புதியது போன்று பளிச்சென்று இருக்கும்.

Maha

Next Post

இந்திய பிரதமர் நரேந்திர மோடி "மிகவும் புத்திசாலி"..., பாராட்டி தள்ளிய ரஷ்ய அதிபர்..! காரணம் என்ன..?

Thu Oct 5 , 2023
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் புத்திசாலி” என்றும், அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாராட்டியதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைமுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை புடின் வெளிப்படுத்தினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷ்யா அதிபர் புதின், “பிரதமர் மோடியுடன் நாங்கள் […]

You May Like