fbpx

இதை மட்டும் செய்யுங்கள்; உங்கள் ப்ரிட்ஜ் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும்..

பொதுவாக பலர் தங்களின் ப்ரிட்ஜை சுத்தம் செய்வதில்லை. இதனால் பல நேரங்களில் ப்ரிட்ஜை திறக்கும் போது, துர்நாற்றம் வீசுவது உண்டு. இதனால் ப்ரிட்ஜில் இருக்கும் உணவுகளில் கிருமிகள் வளர வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் அடிக்கடி ப்ரிட்ஜை சுத்தம் செய்வது அவசியம்.. பரிட்சை எப்படி சரியான முறையில் சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்..

முதலில், ப்ரிட்ஜில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்து விடுங்கள். பின்னர் அதில் உள்ள அலமாரிகளை வெளியே எடுத்து, அவற்றை வெதுவெதுப்பான, சோப்பு நீரில் ஊறவைத்துவிடுங்கள். ஊறவைத்து கழுவுவதால் அழுக்குகளை சுலபமாக அகற்றலாம். இப்போது, வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணியை சுத்தமான துணியில் நனைத்து துடையுங்கள். இதனால் பிடிவாதமான கரைகள் நீங்கிவிடும். இதே தண்ணீரை பயன்படுத்தி, பிரிட்ஜின் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து விடுங்கள்.

அடுத்தது, ப்ரிட்ஜில் உள்ள பாத்திரங்கள், சாஸ், ஜூஸ், பாட்டில்களை சரியாக மூடி, அதை தண்ணீரில் அலசி விடுங்கள். இப்போது, உங்கள் ப்ரிட்ஜில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதை ஃப்ரிட்ஜின் எதாவது ரேக்கில் வைத்துவிடுங்கள். ப்ரிட்ஜை சுத்தம் செய்ய, ஒரு பெரிய ஸ்ப்ரே பாட்டிலில் 1 கப் வெதுவெதுப்பான நீர், 1/2 கப் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் வெண்ணிலா சாறு கலந்து பயன்படுத்தலாம். இதனால் ப்ரிட்ஜ் வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

Maha

Next Post

மழைக்காலத்தில், துணிகளில் துர்நாற்றம் வீசுகிறதா?? அப்போ இதை செய்து பாருங்கள்..

Wed Oct 11 , 2023
மழை காலம் வந்துவிட்டால், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, ஈர துணிகளை காய வைப்பது. வெயில் இல்லாததால் நாம் ஆடைகளை மின்விசிறி கீழ் துணிகளை காய வைப்போம். ஆனால் அப்படி செய்வதால் துணிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசும்.. இதை தவிர்க்க சில வழிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. முதலில் துவைத்த துணிகளை, காற்றோட்டமான திறந்த இடத்தில் தொங்க விடுங்கள். பிறகு பேப்பரை கொண்டு துணிகளை […]

You May Like