fbpx

கெட்டுப்போன முட்டையை.., எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா??

பொதுவாக பலர் தங்களின் வீடுகளில் முட்டையை மொத்தமாக வாங்கி வைத்து விடுவது உண்டு. ஏனென்றால், இது சுலபமாக செய்யப்படும் உணவு. அது மட்டும் இல்லாமல், இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. ஆனால், நாம் மொத்தமாக முட்டையை வாங்கி பிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல. ஆம், கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாகும். நாம் பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை வாங்கியவுடன் பிரிட்ஜில் வைப்பதால், குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருகும். இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

மேலும், ஒரு சில நேரங்களில் கெட்டுவிடும். இந்த அழுகிய முட்டையை எப்படி கண்டறிவது என்று பலருக்கு தெரியவில்லை. இப்படி அழுகிய முட்டையை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும். முட்டை அழுகி விட்டதா என்பதை கண்டுபிடிக்க, ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து அதில் முட்டையை மெதுவாக விடுங்கள். நல்ல முட்டைகள் எப்போதும் தண்ணீரில் மிதக்காது. ஆனால் முட்டை மிதந்தால் கெட்டுப் போனது என்று அர்த்தம்.

Maha

Next Post

கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும்.. ஏன் தெரியுமா??

Thu Oct 5 , 2023
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு குழந்தை பிறந்த உடன் பல விஷயங்களை குழந்தைக்கு செய்வது உண்டு. இதை பலர் மூட நம்பிக்கை என்று கூறினாலும், இதற்க்கு பின் அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருப்பது உண்டு. அப்படி நாம் பின் பற்றும் ஒரு பழக்கம் தான் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது. பொதுவாக கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது தான் வழக்கம். ஆனால் சிலர் வெள்ளி அல்லது தங்கத்தில் தங்களின் […]

You May Like