fbpx

ரேஷன் அரிசியில் பஞ்சு போல மிருதுவான இட்லி செய்யலாம்..! இதை மட்டும் சேர்த்தால் போதும்…

பொதுவாக பல வீடுகளில் காலை, இரவு என அடிக்கடி செய்யும் ஒரு உணவு தான் இட்லி. ஒரு வகையில் இட்லி நமது உடலுக்கு நல்லது தான். ஆம், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, ஆவியில் வேக வைப்பதால் இட்லி நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த உணவு ஆகும். ஆனால் பல நேரங்களில், இட்லி சரியாக வராது. பல இல்லத்தரசிகளின் ஆசை இட்லி பஞ்சு பஞ்சாக வர வேண்டும் என்பது தான். இதனால் பலர் இட்லிக்கென்று கிடைக்கும் அரிசியை வாங்கி அரைத்து இட்லி செய்து கொண்டிருக்கிறோம். மேலும், ஒரு சிலருக்கு ரேஷன் அரிசியில் இட்லி செய்யும் போது அதில் வரும் வாசனை சாப்பிடுவதற்கு பிடிக்காது.

ஆனால் இனி நாம் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியை வைத்து எப்படி இட்லி மிருதுவாக பஞ்சு போன்று, அதே சமையம் வாசனை இல்லாமல் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம். முதலில் 3 கப் ரேஷன் அரிசியை, தண்ணீர் சேர்த்து சிறிது கல் உப்பையும் சேர்த்து நன்றாக கழுவுங்கள். இதே போன்று 8 முறை உப்பு சேர்த்து அரிசியை நன்றாக கழுவிவிடுங்கள். இப்போது அரிசியில் உள்ள பழுப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி விடும். அரிசி அளந்த கப்பில் 2 கப் இட்லி அரிசி சேர்த்து மீண்டும் இரண்டு முறை சுத்தமாக கழுவிவிடுங்கள்.

பின்னர், இட்லி அரிசியை தண்ணீர் சற்று அதிகமாக சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அரிசி அளந்த அதே கப்பில் 1 1/4 கப் ஊளுந்தை எடுத்து 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பின் 3/4 கப் அவலை நன்கு கழுவி விட்டு 10 நிமிடம் ஊற வைத்துவிடுங்கள். இப்படி அவல் சேர்ப்பதால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். இப்போது ஊறிய உளுந்தை, கிரைண்டரில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரையுங்கள். மாவு 10 நிமிடத்தில் உபரியாக வந்துவிடும். ஆனால் நாம் குறைந்தது 25 நிமிடமாவது நன்கு அரைக்க வேண்டும். எப்போதும் உளுந்து மாவு கெட்டியாகவும் இல்லாமல், தண்ணியாகவும் இல்லாமல், பதமாக இருக்க வேண்டும்.

இப்போது அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துவிட்டு, பின் அவலை கிரைண்டரில் போட்டு 5 நிமிடம் அரைக்கவும். அரிசியையும் அவலையும் சேர்த்து அரைக்க கூடாது. இப்போது அவல் அரை பட்டதும், அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். 15 நிமிடத்தில் மாவு சற்று கொரகொரப்பாக வந்த உடன், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வழித்து விடுங்கள். இப்போது இந்த மாவை உளுந்து மாவுடன் நன்றாக கலந்து மூடி வைத்துவிடுங்கள். இந்த மாவை 8 முதல் 9 மணி நேரம் வைத்து விட்டால், இட்லி மாவு நன்றாக புளித்து விடும். இப்போது மாவை நன்றாக கலக்கி இட்லி ஊற்றுங்கள்.. நீங்கள் ஆசைப்பட்ட பஞ்சு போன்ற மிருதுவான இட்லி ரெடி..

Maha

Next Post

40 குழந்தைகளின் தலை துண்டிப்பு!... உயிருடன் எரித்து கொடூரம்!... ஹமாஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம்!

Wed Oct 11 , 2023
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள், 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும் சிலரை உயிருடன் எரித்தும் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இதில் காசா எனும் பகுதி பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த காசா இஸ்ரேல் வசம் இருந்த நிலையில் தற்போது அதனை […]

You May Like