fbpx

இதை மட்டும் செய்யுங்கள், எத்தனை நாள் அனாலும் வெங்காயம் அழுகாது..

பெரும்பாலும் நாம் செய்யும் எல்லா சமையலுக்கு வெங்காயம் கண்டிப்பாக தேவை. இதனால் பல வீடுகளில் வெங்காயத்தை மொத்தமாக வாங்கி வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் நாம் அப்படி வெங்காயத்தை மொத்தமாக வாங்கி வைக்கும் போது, அது பல நேரங்களில் கெட்டுப்போய் விடுகிறது. ஆனால் நாம் ஒரு சில டிப்சை பின் பற்றுவதால், வெங்காயம் 1 மாதம் ஆனால் கூட கேட்டு போகாமல் இருக்கம். அந்த டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  • முதலில் வெங்காயம் வாங்கும் போதே எந்த ஒரு கீறலும் இல்லாமல் உலர்ந்த நன்கு தரமாக இருக்கும் வெங்காயத்தை வாங்க வேண்டும். ஏனென்றால், நாம் வாங்கும் வெங்காயத்தில் கீறல் அல்லது அடிபட்டு இருந்தால் இரண்டே நாட்களில் அழுக தொடங்கிவிடும்.
  • வெங்காயத்தை ஈரப்பதம் உள்ள இடத்தில் வைப்பதால், வெங்காயம் மோக சீக்கிரமாக அழுகிவிடும். எனவே ஈரப்பதம் உள்ள இடத்தில் வெங்காயம் வைப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும், நாம் வெங்காயத்தை உலர்ந்த இடத்திலோ அல்லது காற்றோட்டம் உள்ள இடத்திலோ வைப்பது மிகவும் சிறந்தது.
  • வெங்காயத்தை வாங்கி வந்ததும் உடன அதை உள்ளே எடுத்து வைக்காமல், அதனை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி விடுங்கள். பின்னர், அந்த வெங்காயத்தை பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து சேமித்து வையுங்கள் அல்லது காற்று செல்லக்கூடிய உலர்ந்த அட்டை பெட்டியில் போட்டு வைத்து விடுங்கள்.
  • எப்போதும் நாம் வெங்காயத்தை மற்ற காய்களுடன் சேர்த்து வைக்கவே கூடாது. இப்படி செய்வதால், வெங்காயத்துடன் இருக்கும் மற்ற காய்கறிகள் அழுகும் போது, வெளியேறும் ஒரு வாயு, அதன் உடன் இருக்கும் வெங்காயத்தையும் அழுக செய்து விடும்..

Maha

Next Post

பட்டாசுக் கடை வைக்க உரிமம்...! இ-சேவை மையங்கள் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்...! தேவையான ஆவணங்கள்...?

Tue Oct 17 , 2023
12.11.2023-ஆம் தேதி அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் படி பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில் 12.11.2023-ஆம் தேதி அன்று வரவிருக்கும் […]

You May Like