fbpx

துணிகளில் சாயம் படிந்து விட்டதா?? இதை மட்டும் செய்யுங்கள்..

பொதுவாக நாம் தின பயன்பாட்டிற்கு அணியும் ஆடைகளை நாள் முழுவதும் அணிவதால், அதில் கரைகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் ஆடைகள் சீக்கிரம் நிறம் மாறிவிடும். மேலும் நமக்கு பிடித்த ஆடைகள், அல்லது குழந்தைகளின் சீருடைகளில் கரை படிந்து விட்டால் அதை துவைப்பது மிக கடினம். மேலும், துணிகளில் நிறம் மாறி பழைய துணி போல் மாறிவிடும். இதனால் எப்படி துணிகளில் உள்ள விடாப்படியான கரையை, துணியின் நிறம் மாறாமல் சுலபமாக நீங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.

துணிகளை எப்போதும் குளிர்ந்த நீரில் சலவை செய்வது நல்லது. உங்கள் ஆடைக்கு அதிக சோப்புகளை பயன்படுத்தினால் ஆடைகளின் தரம் மாற வாய்ப்புள்ளது. அதனால் துணிகளுக்கு சோப்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். வெள்ளை ஆடைகளின் பளிச் நிறத்திற்கு சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். நீங்கள் வெள்ளை வினிகரை பயன்படுத்தி, உங்கள் ஆடைகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்கலாம். மேலும் இதனால் ஆடைகளில் வீசும் நாற்றத்தை குறைப்பதோடு, கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்க உதவும்.

பேக்கிங் சோடாவும், வினிகரும் சாய கறை படிந்த துணிகளின் கரையை எளிமையாக நீக்கிவிடும். இதற்க்கு முதலில் ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் வினீகரையும் சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். பின்னர், சாய கறை படிந்த துணிகளை இதில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் கறை உள்ள இடத்தில் தேய்த்து கசக்கினால் அனைத்து சாய கரைகளும் நீங்கிவிடும். ஆடைகளில் உள்ள விடாபடியான எண்ணெய் கறையை நீக்குவதற்கு, எலுமிச்சை சாற்றை அந்த எண்ணெய் கறை மீது தேய்த்த பின்னர் அலசினால் போதும்.

Maha

Next Post

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு...! 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... பலர் படுகாயம்...!

Sat Oct 14 , 2023
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாக்லான் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள போல்-இ-கோம்ரியில் உள்ள தக்கியகானா இமாம் ஜமாத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாக்லானின் […]

You May Like