fbpx

’கன்டென்ட் என்ற பெயரில் இப்படியுமா செய்வீங்க’..? புல்லி கேங்கை வறுத்தெடுத்த ரச்சிதா..!!

பிக்பாஸ் இல்லத்திற்குள் கன்டென்ட் என்ற பெயரில் தன்னை இழுப்பது தேவையில்லாதது என ஆவேசமாக மாயா, பூர்ணிமா மற்றும் அவர்களுடைய புல்லி கேங்கைத் திட்டி நடிகை ரச்சிதா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் 7-வது சீசனில் நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார். இவரது விளையாட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வருகிறது. அதேசமயம் மாயா, பூர்ணிமா, ஜோவிகாவின் புல்லி கேங்குக்கும் பார்வையாளர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு முக்கியக் காரணம் ரச்சிதாவுக்காகவும் எனச் சொல்லி இருந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தினேஷ் ரச்சிதாவோடு திரும்ப சேருவதற்கான முயற்சி எடுத்தாலும் ரச்சிதா அதற்கு உடன்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் மாயா மற்றும் பூர்ணிமா பேசுவது போல வெளியான ஒரு காணொளியில், அவர்கள் தினேஷை டார்கெட் செய்வது போல பேசியுள்ளனர். மேலும் அவருடைய ரச்சிதாவுடன் தினேஷ் பற்றி பேச வேண்டும் என்று அந்த காணொளியில் அவர்கள் பேசுவது போல அமைந்துள்ளது.

இந்நிலையில், தன்னை பற்றி அவர்கள் இருவரும் பேசவேண்டிய அவசியம் என்ன? நான் ஏற்கெனவே வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்து வருகிறேன் என்று கூறி பேசியுள்ளார். இது குறித்து ரச்சிதா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘விளையாடிற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அவசியம் இல்லை’ என கட்டமாக பூர்ணிமா மற்றும் மாயாவை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

Chella

Next Post

உலகிலேயே மிக மோசமான காற்று..!! மோசமான 10 நகரங்கள்..!! இந்தியாவில் எந்தெந்த நகரம்..?

Mon Nov 13 , 2023
காற்று மாசுபாட்டில் உலகின் மிக மோசமான 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி வழக்கம்போல முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூ ஏர்’ என்ற அமைப்பின் கண்காணிப்பின்படி, தீபாவளிக்கு முன்னர் டெல்லியின் காற்று மாசு, அதன் தரக் குறியீடு அளவில் 420 என்பதாக இருந்தது. இந்த மோசமான நகரங்களின் டாப் 10 பட்டியலில் கூடுதலாக 2 இந்திய நகரங்கள் இணைந்துள்ளன. காற்று தரக்குறியீடு 196 என்றளவில் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது கொல்கத்தா. […]

You May Like