fbpx

வாரத்தில் ஒருநாள் மட்டும் மது அருந்துகிறீர்களா?… இந்த பாதிப்புகள் 5 மடங்கு அதிகமாகுமாம்!… ஆய்வில் எச்சரிக்கை!

ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தித்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 30 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே காணப்படும் வார இறுதி மதுபழக்கம் பற்றிய போக்கு இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பலர் தங்களுக்கு லேசான அல்லது மிதமான குடிப்பழக்கம் இருப்பதாக கருதுகிறார்கள். வார நாட்களில் இரவு உணவோடு ஒரு காக்டெய்ல் அல்லது ஒரு கிளாஸ் ஒயின் குடிப்போம் என்றும், வார இறுதி நாட்கள் என்று வரும் போது பார்ட்டி அல்லது social gatherings-ல் பங்கேற்கும் போது சற்று கூடுதலாக குடிப்பதாக கூறினர். ஆனாலும் கூட வர இறுதியில் மட்டும் கூடுதலாக குடிக்கும் பழக்கம் தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வார இறுதியில் அதிகம் மது அருந்துபவர்கள் ஆல்கஹால் தொடர்பான பல உடல் நலப் பிரச்சனைகளை அனுபவிக்கும் வாய்ப்பு சுமார் 5 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உடல் ரீதியிலான பாதிப்பு மட்டுமின்றி, மன உளைச்சல், Alcohol tolerance அதிகரிப்பது, அலுவலகம் அல்லது நிறுவனங்களில் பொறுப்புகளை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது என பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக சொல்வதென்றால், ஒரு நபர் தினமும் குடித்தாலும், அவர் குடிக்கும் அளவை விட, வார இறுதியில் மட்டும் குடிக்கும் நபர் அதிகமாக மது குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

மது அருந்துவதால் தொடர்பான மூளை பாதிப்பு, இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான அதிக ஆபத்து உள்ளிட்டவற்றுக்கு பெண்கள் மிக எளிதாக பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பெண்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரிங்க்ஸ்களையும், ஆண்கள் ஒரு நாளைக்கு 2 ட்ரிங்க்ஸ்களையும் குடிப்பது நீண்ட கால மது சார்ந்த பிரச்சனைகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.

ஆண்கள் 1 நாளைக்கு இரண்டு Standard Drinks-களும், பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 Standard Drink-ம் குடிக்கலாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு Standard Drink என்பது 12 அவுன்ஸ் (சுமார் 350மிலி) பீருக்கு, 4 அவுன்ஸ் (தோராயமாக 120மிலி) ஒயினுக்கு, அல்லது 1.5 அவுன்ஸ் (சுமார் 40மிலி) liquor-க்கு சமம் ஆகும்.

Kokila

Next Post

குட் நியூஸ்…! இனி இவர்களுக்கு ஊதியம் ரூ.5,000-10,000 வரை உயர்வு -தமிழக அரசு ஆணை..

Mon Sep 4 , 2023
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாளி டேசனிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் […]

You May Like