fbpx

பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்!… உடலில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்ததா?…

தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறியது போல நீர் இல்லாமல் உலகத்தில் செடி, கொடி மரங்கள் முதல் மனிதன் வரை எந்த உயிரும் வாழ முடியாது. மனிதனின் உடலில் சராசரியாக 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஒவ்வொருவரும் தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீர் உள்ளவாறு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் உடலை ஆரோக்கியமா வைத்துக் கொள்ளவும் பலவிதமான நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவி செய்கிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது என்பது அடிப்படையான பழக்கங்களில் ஒன்று. ஒரு நாளுக்கு இரண்டு முறை நம் பற்களை கட்டாயம் துலக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் ஒரு முறை பல் துலக்க வேண்டும். அது போல இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் ஒரு முறை பல் துலக்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி முடித்த பிறகு தண்ணீர் குடிப்பதை பழக்க வழக்கமாக கொண்டுள்ளனர். அது போலவே தூங்கி எழுந்தவுடன் உமிழ்நீர் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உமிழ்நீர் வயிற்றுக்குள் செல்கிறது. இதன் மூலமாக உள்ளே செல்லும் உமிழ் நீரில் உள்ள அமில உள்ளடக்கம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கொன்று விடுகிறது. இதனால் நம் உடலுக்கு நன்மையே கிடைக்கின்றது. மருத்துவர்களும் அதையே பரிந்துரை செய்கின்றனர்.

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உங்களின் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கிறது. இதன் விளைவாக உடலின் ஜீரண சக்தியும் அதிகரிக்கின்றது. அது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் பல்வேறு மடங்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது. இதனால் நம் உடல் பல்வேறு கிருமிகளையும் நோய்களையும் எதிர்த்து போராட உதவி செய்கின்றது.

உங்களின் உடலை அதிக அளவு நீர் உள்ளவாறு வைத்திருப்பதும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கின்றது. காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக உங்கள் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும். அது மட்டுமில்லாமல் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் புதிய செல்கள் அதிகமாகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளப்பாக மாறுகிறது.

தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது வாயில் பாக்டீரியாக்கள் சேர்வதை தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் பற்களில் ஏற்படும் ஓடீடைகளின் அபாயத்தையும் குறைக்கின்றது. நமது வாயில் உமிழ்நீர் இல்லாதபோது வாய் முற்றிலும் வறண்டு விடுகிறது. இது ஹலிடோசிஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க காலையில் எழுந்தவுன் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் வாய் துர்நாற்றப் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் உங்கள் குடல் சுத்தமடைகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் எந்தவிதமான மலச்சிக்கல் பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது.

Kokila

Next Post

தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம்...! அதிரடியாக நிறுத்தி வைப்பு...! முதல்வர் முக்கிய அறிவிப்பு...!

Tue Apr 25 , 2023
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழக அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நேற்று, அமைச்சர்கள், தலைமைச் […]

You May Like