fbpx

துவைத்த துணிகளை வீட்டிற்குள்ளேயே காயவைக்கிறீர்களா?… எவ்வளவு ஆபத்து தெரியுமா?…

துவைத்த துணிகளை வீட்டிற்குள்ளேயே காயவைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இதில் தெரிந்துகொள்வோம்.

இன்றைய காலத்தில் வீடுகள் தள்ளி தள்ளி இருக்கும் அதாவது சிறிய இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது நகர்புறங்களில் வீடுகள் ஒட்டி ஒட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் பலர் வீட்டில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காயவைத்து கொள்கின்றனர். அந்த காலத்தில் வீட்டை சுற்றி கயிறு கட்டி அங்கு துணியை காய வைத்தனர். இதனால் வெயிலில் துணிகள் காய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

தற்போது வீட்டில் துணியை காய வைப்பதன் மூலம் கண்ணுக்கு தெரியாமல் பூஞ்சைகள், பாக்டீரியா நுண்ணுயிர்கள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிகம் இருக்கும். இதனால் வீட்டில் காயப்போடும் துணிகளில் அதிகம். இது நமது உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது என்று ஆய்வு கூறுகின்றது. ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் அதிகளவில் இருக்கும்.

நம் வீடுகளில் காயவைக்கும் துணிகளோடு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த ஆடையை நாம் அணியும் போது அவர்களுக்கு மூச்சு குழல் வழியாக நுண் கிருமிகள் உள்ளே சென்று ஆஸ்துமாவை உருவாக்கும். இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30% அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. நன்கு வெயிலில் இருக்கும் துணிகள், வெளிப்பகுதியில் காயவைக்கும் துணிகளில் இது இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Kokila

Next Post

முன்னாள் முதல்வர் உயிரிழப்பு...! அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...! அரசு உத்தரவு...!

Thu Apr 27 , 2023
உடல் நலக்குறைவு காரணமாக காலமான பஞ்ச முன்னாள் முதலமைச்சரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் […]

You May Like