இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென நினைக்கிறீர்களா..? அப்படினா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க. காலை உணவு உடலுக்கு மிக மிக அவசியம். காலையில் ஓர் அரசனைப் போலவும் இரவில் ஒரு யாசகனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட. நீங்கள் காலை எழுந்தவுடன் சிந்திக்கும் முதல் விஷயம் காலை ஆகாரத்தைப் பற்றி இருந்தால் நல்லது.
காலை உணவை தவிர்க்கும்போது அந்த நாள் சோர்வு நிறைந்ததாக இருக்கும். அதனால் இரவில் அதிகம் சாப்பிட நேரிடும். எனவே, காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது. சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு நிறைவாக இருக்கும். அதனால் இரவு தூங்கச் செல்லும் முன்னர் நிச்சயமாக அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது. சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல் என்பதில் ஒரு சூட்சமம் உள்ளது.
தண்ணீர் அருந்துதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும். நீங்கள் ஒரு நாளின் கடைசி வேளை உணவை உட்கொள்ளும் முன்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்திப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாக இரவில் அதிகம் உணவு உட்கொள்ள மாட்டீர்கள். காலை உணவில் நிச்சயமாக புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
புரதம் இருப்பதால் நிறைவான உணர்வத் தரும். மதியத்திலும் உணவில் பருப்பு, தானியங்கள் என ஏதேனும் இருப்பதை உறுதி செய்யுங்கள். உணவை அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது. நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் மூளைக்கு நமக்கு சரியான நேரத்தில் வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞையைத் தரும்.
Read More : வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி..!! நோட்டமிட்ட மர்ம நபர்..!! திடீரென உள்ளே புகுந்து பாலியல் பலாத்காரம்..!!