அதிகமாக கோபமடைவதால் மாரடைப்பு, ஆயுட்காலம் குறைப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது
கோபம் என்பது பொதுவான உணர்வாகும். இது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும் ஆரோக்கியமான உணர்வு. கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் ஓர் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு கோபம் ஏற்படும்போது அதனை கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்தினால் நல்லது. அவற்றை கட்டுப்படுத்தினால் அவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் கோபம் என்பது குடும்பங்களில் மற்றும் வேலைபார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளினால் மன அழுத்தம், நிதி நெருக்கடி, மது பழக்கம் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும்.
மனிதன் ஒருநாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கோபத்தில் இருந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக உயர்த்துக்கிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் கோபம் உச்சக்கட்டம் அடையாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.கோபம் மற்றும் மனஅழுத்தம் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைகிறது. அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் உச்சக்கட்ட கோபம் ஏற்படும் நபர்களை விட மகிழ்ச்சியாக வாழ்கின்ற நபர் நீண்ட காலம் வாழ்வார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.நூரையீரல் பாதிக்கப்படுவது புகைபிடித்தல் மட்டும் காரணம் என சொல்ல முடியாது. அதிகப்படியான கோபமும் நூரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நூரையீரல் பலவீனமாவதற்கு கோபம் மற்றும் புகைபிடித்தல் காரணமாக அமைகிறது.
அர்த்தமற்ற கோபம் என்பது சிலர் முட்டாள்தனமான விஷயங்களுக்காக கடுமையாக நடந்து கொள்வார்கள். அதாவது ஒரு நபர் தன் கோபத்தை வேறு சில நபர்களிடம் வெளிப்படுத்துவர்.ஆக்ரோஷமான கோபத்தை உடையவர்கள் தனது கோபத்திற்கான காரணத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்த கோபத்தை உடையவர்கள்.தன்னை அல்லது தன்னை சுற்றியுள்ள மற்றவர்களை காயப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ வாய்ப்புகள் உண்டு. மேலும் இந்த வகையான கோபம் பழிவாங்குவதற்கு வழிவகுக்கிறது.
கோபம் என்பது மனித உணர்வுகளின் ஒன்று.ஆனால் அதிகப்படியான கோபம் ஏற்பட்டால் உடலில் பல உடல்நலக்குறைவுகள் ஏற்படும் கூறப்படுகிறது.ஒரு மனிதன் தனது கோபத்திற்கான காரணத்தை நினைக்கும்பொழுது அவை நோயெதிர்ப்பு சக்தியை குறைகிறது என ஆய்வுகள் காட்டுகிறது. எனவே கோபமே உடல்நலக்குறைவுகளுக்கு காரணமாக அமைகிறது.