தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இளைஞர்கள் ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலக்ட்ரிக்கல் கடை மற்றும் ஸ்டேஷனரி கடை போன்ற பல தொழில்களை தொடங்குவதற்கு அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடனில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் நிலையில், அதிகபட்ச 3.75 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் கிடைக்கும். இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக கடன் வழங்கப்படுகிறது. தொழில் செய்ய ஆர்வம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் UYEGP விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.