fbpx

இளைஞர்களே ட்ரெக்கிங் செல்ல நினைக்கிறீர்களா..? கண்டிப்பா இந்த விஷயங்களை மறந்துறாதீங்க..!!

ட்ரெக்கிங் அல்லது மலை ஏற்றம் என்பது அனைவரது வாழ்க்கையில் ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டிய ஒரு சாகச பயணமாகும். இயற்கையோடு ஒன்றி ஒரு பயணம் செல்லும்போது, அது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய செய்யும். அதே நேரம் உடல் வலிமைக்கும், மன உறுதிக்கும் சவால் விடும். அதை எதிர்கொள்ள சில தயாரிப்புகள் தேவை. அவற்றை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் : கடினமான மலையேற்றத்திற்குச் செல்வதற்கு முன் உடல் தகுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். சாதாரண தரையில் நடப்பதற்கும் கரடுமுரடான பாதையில் நடந்து செல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதற்கு ஏற்ப தசைகளை பழக்கும் பயிற்சிகளையும், உயரத்தில் ஏறும்போது தேவைப்படும் இதய துடிப்பு சீரமைப்பு மற்றும் மூச்சு பயிற்சிகளை முன்னரே செய்து பழக வேண்டும். இதற்கு எளிமையாக தினமும் உங்கள் வீட்டில் உள்ள படிகளை ஏறி-இறங்கி பயிற்சி செய்யலாம்.

மனதளவில் தயாராக வேண்டும் : கடினமான மலையேற்றத்திற்குச் செல்வது சவாலானதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் அதற்கு முன்னர் மனதளவில் தயாராக இருப்பது அவசியம். சார்லஸ் டார்வின் “நம் மனோபாவம் (Attitude) என்பது ஒரு சாகசத்திற்கும் சோதனைக்கும் இடையிலான வேறுபாட்டை உருவாக்குகிறது” என்றார். அதனால் எதையும் நின்று போராடும் தன்மையை பழக வேண்டும்.

வழி மற்றும் வழிகாட்டி தேர்வு: மலையேற்றத்தை மேற்கொள்வதற்கு முன், பொருத்தமான வழி மற்றும் அறிவு மிக்க வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் அனுபவ நிலை மற்றும் உடற்தகுதியுடன் பொருந்தக்கூடிய வழியைத் தேர்வு செய்து, அதன் பாதை, நிலப்பரப்பு மற்றும் வானிலை பற்றிய அனைத்துத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதே போல அந்த இடத்தை பற்றி நன்கு தெரிந்த அனுபவசாலியை வழிகாட்டி துணையாகக் கூட்டிச்செல்லுங்கள்.

ஆடை மற்றும் பாதணிகள்: வானிலை மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மலையேற்றத்திற்கு பொருத்தமான ஆடை மற்றும் காலணிகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுக்கு ஆடைகள் உடல் வெப்பநிலையை சீராக்கவும், வெயில், மழை மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கொப்புளங்கள் அல்லது காயங்களைத் தவிர்க்க நல்ல தரமான, உறுதியான  பாதணிகளை அணிந்துகொள்ளுங்கள்.

உபகரணங்கள்:  மலையேற்றம் செல்லும் போது தேவையான முதுகுப்பை, கூடாரம், தூங்கும் பை, காலணி மற்றும் கைத்தடி போன்ற பொருட்களை சரியாக எடுத்துச் செல்லுங்கள். அதேநேரம்  உபகரணங்கள் இலவாகவும், நீர்ப்புகாதன்மையுடனும் (Waterproof) மற்றும் பயன்படுத்த வசதியாக இருப்பதை உறுதி செய்யவும். கூடுதலாக, தண்ணீர் பாட்டில், ஹெட்லேம்ப் (Headlamp) போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.

பாதுகாப்பு: மலையேற்றம் செல்லும் போது வெயில், காட்டு பூச்சிகள் ஆகியவை படும். எனவே சூரியனின் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம். அதேபோல பூச்சி விரட்டிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். கூடுதலாக, வலி ​​நிவாரணிகள், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மாத்திரைகள் போன்ற அடிப்படை மருந்துகளை எடுத்துச் செல்வது அவசியம்.

Chella

Next Post

ஊர்வலத்தின் போதே உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட மாப்பிள்ளை..!! மணமேடையில் வைத்து சம்பவம் செய்த மணப்பெண்..!!

Tue May 9 , 2023
திருமண வீடு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பது நம் கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால், தற்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி திருமணம் கொண்டாட்டடம் என்றாலும் அதன்போக்கு மாறிவிட்டது. இதனால், சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட திருமணங்கள் நின்று போகும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதாவது கொண்டாட்டத்தின் போது ஏற்படும் சலசலப்புகளும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து திருமணங்கள் நின்று விடுகின்றன. அந்த வகையில், மாப்பிள்ளையின் அடாவடியால் தற்போது ஒரு திருமணம் நின்றதை […]

You May Like