உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம். வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழைய நாணயத்தின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாகவும், அதிக டிமாண்ட் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.குயிக்கர், காயின் பஜார், ஈபே, இந்தியா மார்ட், ஓ.எல்.எக்ஸ். உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் இந்த நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடமும் அரிய வகை நாணயங்கள் இருந்தால் அதை விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.
உங்களிடம் மாதா வைஷ்ணவி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். மாதா வைஷ்ணவி தேவி இருக்கும் இந்த நாணயங்கள் இந்துக்கள் சிலரிடம் அதிர்ஷ்டம் தரும் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்று நம்புகின்றனர். எனவே இதற்கு நிறைய விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
உங்களிடம் இந்த நாணயம் இருந்தால் அதை Quikr வெப்சைட்டில் நீங்கள் விற்பனை செய்யலாம். ஒரு விற்பனையாளராக நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகு இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களைத் தொடர்பு கொண்டு அதற்கான விலை கொடுத்து வாங்குவார். அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு 10 லட்சம் வரையில் கிடைக்கும். நாணயத்தை தெளிவாக போட்டோ எடுத்துக்கொள்ளவும், அந்த படத்தை OLX, eBay போன்ற தளங்களில் அப்லோடு செய்து விளம்பரம் செய்யவும். உங்களை தொடர்புகொள்வோரிடம் பேரம் பேசி நாணயத்தை விற்றுவிடலாம்.
இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில், பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவைப் பயன்படுத்தி, பொதுமக்களிடமிருந்து கட்டணங்கள் / கமிஷன் / வரியை சில குறிப்பிட்ட கூறுகள் மோசடியாகப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், எந்த விதமான கட்டணங்கள் / கமிஷன்களை கோருவதில்லை. அத்தகைய பரிவர்த்தனைகளில் கட்டணம் / கமிஷன் வசூலிக்க ரிசர்வ் வங்கி எந்த நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.