fbpx

நாய் வளர்க்குறீங்களா? அப்போ இதுல்லாம் ரொம்ப முக்கியம்!! உடனடியா அப்ளே செய்யுங்க!!

நாய் வளர்த்தால் கட்டாயம் அதனை பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அதனை ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்பது தெரிந்துகொள்ளலாம்.

கடந்த வாரம் சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை விதித்தும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நாய்களை வளர்க்க உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியிடம் எப்படி பதிவு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். திரு.வி.க. நகரில் உள்ள கால்நடை மையம், நுங்கம்பாக்கம் கால்நடை மையம், கண்ணம்மாபேட்டை கால்நடை மையம், மண்டலம் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் இந்த சான்றிதழைப் பெறலாம். மேலும், ஆன்லைனிலும் கூட நீங்கள் இந்த சான்றிதழைப் பெறலாம். இதற்கு நீங்கள் 50 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒரு முறை மட்டுமே வாங்கிவிட்டால் போதாது. ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் இதை ரூ.50 செலுத்திப் புதுப்பிக்க வேண்டும். அதையும் நீங்கள் ஆன்லைனிலையே செய்து கொள்ளலாம்.

பொதுவாக உரிமம் பெற்றால் வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அகற்றுவது, இனப்பெருக்கம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்கப்படும். பொதுவாகச் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வளர்த்தாலும் நீங்கள் கட்டாயம் வளர்ப்புப் பிராணியைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், நடைமுறையில் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வரை இது தொடர்பாக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்த நிலையில் சென்னை சம்பவத்திற்குப் பிறகு, மாநகராட்சி நாய்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி உள்ளது.

முதலில் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும், அதில் ஆன்லைன் சர்வீஸ் என்பதை க்ளிக் செய்யவும். அதில் pet animal licence என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்யவும். உள்ளே நியூ யூசர் என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு இருப்பார்கள். அதைப் டைப் செய்யுங்கள். மேலும், மொபைல் நம்பர், மெயில் ஐடியையும் கேட்பார்கள். அதை என்டர் செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை என்டர் செய்தால் உங்கள் கணக்கு ஓபன் ஆகிவிடும். நாய்கள் குழந்தைகளை கடித்தால் செய்ய வேண்டியது என்ன! பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பிறகு லாகின் செய்தால், இடது பக்கம் New Pet Registration என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் உங்கள் செல்லப்பிராணியின் பெயர், ப்ரீட், அடையாளக் குறி, நிறம் பாலினம், வயது, செல்லப்பிராணிக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளதா, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதா, எந்த கால்நடை மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்பது குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும்.

மேலும், உங்கள் போட்டோ, நாயின் போட்டோ, உங்கள் அட்ரஸ் ப்ரூப், நாயின் வேக்சினஷன் சான்றிதழை நீங்கள் அதில் அப்லோட் செய்ய வேண்டும். பிறகு கட்டணம் செலுத்தினால் உரிமம் கிடைத்துவிடும். பூனைகளையும் பதிவு செய்ய வேண்டும். மேலும், உங்களிடம் எத்தனை நாய்கள் இருந்தாலும் இதிலேயே பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நாய்களுக்கு எப்போது உரிமம் காலாவதி ஆகிறது என்பதைப் பார்த்துப் புதுப்பித்தும் கொள்ளலாம். வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளுக்கும் நீங்கள் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

Read More: அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட ‘Apple Vision Pro’ ஹெட்செட்.!! சென்னை மருத்துவர்கள் புரட்சி.!!

Baskar

Next Post

சினைப்பை புற்றுநோயும்… அதன் ஆரம்பகால அறிகுறிகளும்..!!

Fri May 10 , 2024
சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகளை நாம் கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. இவை நம் உடலை அமைதியாக தாக்கக்கூடியது. நோயின் கடைசி கட்டத்திலேயே நம்மால் கண்டுபிடிக்க முடியும். பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சினைப்பைக்குள் வளரும் அதிகப்படியான செல்கள் நமது உடலுக்குள் சென்று ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது. மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களிடத்தில் இது பரவலாக காணப்படுகிறது. அதற்காக இளம் பெண்களுக்கு இந்நோய் வராது எனக் கூற […]

You May Like