மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கான அரசு முயற்சிகள் இந்தியாவில் சமூக முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. அந்த முயற்சிகளில் ஒன்றாக 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் தன்மையில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வி, திருமணம், மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த சேமிப்பு திட்டம், குறைந்த முதலீட்டுடன் அதிக வட்டி மற்றும் வரி சலுகைகளை வழங்கி, மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுள்ளது. பெண்களின் வலிமைபடுத்தலிலும், சமூதாய முன்னேற்றத்திலும் இதன் பங்கு முக்கியமானது. இந்த திட்டத்தின் விவரங்கள், அதன் நன்மைகள் மற்றும் நடைமுறை அம்சங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் உதிர்வு காலம் என்பது 21 வருடங்கள் ஆகும். எனினும் முதல் 15 வருடங்கள் மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த இயலும். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இதன் வட்டி விகிதம் 8%. தற்போது இது 2% அதிகரிக்கப்பட்டு 8.2% வட்டி இந்த சேமிப்பிற்கு வழங்கப்படுகிறது.
பெண் குழந்தை 18 வயதை அடைந்ததும் இந்த சேமிப்பு திட்டத்தில் இருந்து பாதி தொகையை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை பிறந்ததும் 10 வயதிற்குள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும். ஒரு வீட்டில் இருக்கும் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் சேர அனுமதி உண்டு. இரட்டைப் பெண் குழந்தைகள் மற்றும் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தால் அதற்கு அரசால் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் பெற்றோர் மட்டுமல்லாமல் சட்டபூர்வமான பாதுகாவலரும் சேர முடியும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். ஆண்டின் குறைந்தபட்ச தொகையான 250 செலுத்த தவறும் பட்சத்தில் உங்களது கணக்கு முடக்கப்படும். பின்னர் இதற்குரிய அபராத தொகையான 50 ரூபாயை செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டம் சிறந்த சேமிப்பு மற்றும் அதிக லாபம் தரக்கூடிய திட்டமாகும். இதன் காரணமாகவே பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் இன்று திட்டம் வெற்றி நடை போட்டு வருகிறது இந்தத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தி வந்தால் முதிர்வு காலத்தில் 8.2% வட்டியுடன் சேர்த்து ரூ.5,70,205/- கிடைக்கும். இந்த தொகையை குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணம் போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் போஸ்ட் ஆபீஸ் மூலமாக கணக்கை தொடங்கலாம். அல்லது பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் சேர முடியும். இவை தவிர பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ போன்ற வங்கிகளின் இணையதளம் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இவை தவிர தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற வங்கிகளின் இணையதளங்களும் இந்த சேவையை வழங்குகிறது.
Read more: இனி எந்த மொழியிலும் சுலபமா பேசலாம்.. குரல் மொழிபெயர்ப்பு அம்சத்தை கொண்டு வந்த Google Meet..!!