fbpx

உங்களுக்கு போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா..? அதிரடியாக வந்த மாற்றங்கள்..!! மறக்காம தெரிஞ்சிக்கோங்க..!!

மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் சம்பந்தமான 3 மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஸ்கீம் 2023ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து ஜூலை 3, 2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் இந்த மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாயிண்ட் அக்கவுண்ட் :

ஜாயிண்ட் அக்கவுண்ட் ஹோல்டர்களின் எண்ணிக்கையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 2 நபர்கள் மட்டுமே ஜாயின்ட் அக்கவுண்ட்டில் சேர முடியும். ஆனால், தற்போது 3 அக்கவுண்ட் ஹோல்டர்கள் வரை சேர்ந்து கொள்ளலாம். அதன்படி, போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஸ்கீம் 2019ஆம் ஆண்டில் உள்ள மூன்றாவது பத்தியில் சப் பரகிராஃப் 1 – கிளாஸ் B -இல் “கூட்டாக இரண்டு வயது வந்தோர்” என்பது “கூட்டுப் பெயர்களுடன் அதிகபட்சமாக மூன்று வயது வந்தோர்” ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வித்டிரா செயல்முறை :

பணத்தை Withdrawal செய்வதற்கு பயன்படுத்த வேண்டியிருந்த ஃபார்ம் 2 தற்போது பார்ம் 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. ரூ.50 அதிகமாக பணத்தை வித்டிரா செய்யும்போது அக்கவுண்ட் பாஸ்புக் மற்றும் கவர்மெண்ட் சேவிங்ஸ் ப்ரொமோஷன் ஜெனரல் ரூல்ஸ் 2018இல் இருந்து பெற்ற ஃபார்ம் 3 முறைப்படி நிரப்பி கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும். வித்டிராயல்களை செக் அல்லது எலக்ட்ரானிக் முறையிலும் செயல்படுத்தலாம்.

வட்டி கணக்கீடு மற்றும் கிரெடிட் செயல் முறை :

இந்த மாற்றம் டெபாசிட்கள் மீதான வட்டி கணக்கீடு மட்டும் கிரெடிட் செயல்முறை சம்பந்தப்பட்டது. ஆண்டுக்கு 4% என்ற கணக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட அக்கவுண்ட்ற்கு ஒரு மாதத்தின் 10ஆம் தேதி முதல் கிரெடிட் செய்யப்படும். துரதிஷ்டவசமாக அக்கவுண்ட் ஹோல்டர் உயிரிழக்கும் பட்சத்தில், அக்கவுண்ட் மூடிய பிறகு அடுத்த மாதம் அதற்கான வட்டி வழங்கப்படும். அதன்படி போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் ஸ்கீம் 2023 இல் இதற்கான மாற்றம் “மாத இறுதியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது “மாத இறுதி வரை” என்று மாற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon Aug 28 , 2023
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Chief Risk Officer, Chief Digital Officer பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA,B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like