இன்வெர்ட்டர் என்பது வீட்டின் இன்றியமையாத அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக, கோடை காலத்தில் மின்வெட்டு கணிசமாக அதிகரிக்கும் சூழலில், இன்வெர்ட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் இன்வெர்ட்டர் இல்லாத போது, மின்சாரம் இல்லாமல் மணிக்கணக்கில் பொழுதை கழிக்கும் மக்கள், தற்போது இன்வெர்ட்டர் இருப்பதால், மின்வெட்டு ஏற்பட்டாலும், அந்த அனுபவத்தை பெறுவதில்லை. இன்வெர்ட்டரை வாங்கினால் மட்டும் போதாது, அதனை சரியான விதத்தில் பயன்படுத்தினால்தான் அதனை பாதுகாக்க முடியும்.
பல காரணங்களால் இன்வெர்ட்டரில் பிரச்சனைகள் வரலாம். அதில், முக்கியமானது வீட்டில் இடத்தில் இன்வெர்ட்டர் வைக்கிறீர்கள் என்பது தான். இன்வெர்ட்டரை சரியாக இயங்க வைக்க, அதன் பேட்டரியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே, சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் மிக விரைவில் கெட்டுவிடும். இன்வெர்ட்டர் வைக்கப்படும் இடத்தில் பேட்டரியின் ஆயுள் மற்றும் சேதத்தை தீர்மானிக்க முடியும்.
இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிக்கு சுத்தமான காற்று கிடைக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். காற்று சுழற்சிக்கு போதுமான இடம் இருப்பது மிகவும் முக்கியம். பேட்டரியைச் சுற்றி உப்பு நீர், அதிக வெப்பம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்வெர்ட்டர் எப்போதும் நிழலான இடத்தில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி கிடைத்தால், அதன் ஆயுள் படிப்படியாக குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Read More : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் எப்போது வெளியீடு..? தேர்வர்களே தேதியை நோட் பண்ணிக்கோங்க..!!