தற்போதைய காலக்கட்டத்தில் எளிதாகவும், விரைவாகவும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். இதற்கு ஆன்லைனில் பல வழிகளும் வந்து விட்டன. அந்த வகையில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் தேவை அதிகரித்து வருவதால், இவற்றை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் அரிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்று பலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. இதுதொடர்பான பல்வேறு விளம்பரங்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது பழைய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் தொடர்பாக ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் “ பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். சர்வதேச சந்தையில் இந்த ரூபாய் நோட்டுக்கு அதிக தேவை இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது 20 ரூபாய் நோட்டுக்கு அதிக தேவை உள்ளதாம். இந்த ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்றால் ரூ.8 லட்சம் வரை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த 20 ரூபாய் நோட்டுகளை விற்பதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது எனவும் இந்த தேவைகளைப் புரிந்துகொள்வது உங்கள் நோட்டை எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக விற்க முடியும் என்றும் அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ரூ.20 நோட்டை விற்க விரும்பினால், அந்த நோட்டில் 786 என்ற வரிசை எண் இருக்க வேண்டும். அந்த ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
இஸ்லாமிய மதத்தில் 786 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. எனவே செழிப்பு மற்றும் அமைதிக்காக பலரும் இந்த நோட்டுகளை வாங்குகிறார்கள் என்பதால் இந்த ரூபாய் நோட்டுக்கு அதிக தேவை இருக்கிறதாம்.
சரி இந்த 20 ரூபாய் நோட்டை எப்படி விற்பது?
உங்களிடம் 786 என்ற வரிசை எண் கொண்ட 20 ரூபாய் நோட்டு இருந்தால், அதனை ஆன்லைனில் விற்கலாம். Coin Bazaar அல்லது Quikr போன்ற இணையதளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் நல்ல விலைக்கு ஏலம் போகிறது. எனவே நீங்களும் உங்கள் பழைய 20 ரூபாய் நோட்டை விற்பனை செய்ய நோட்டை விற்க விரும்பினால், நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- முதலில், Coin Bazaar அல்லது Quikr போன்ற இணையதளங்களுக்குச் செல்லவும். பின்னர் அதில் உங்களை விற்பனையாளராகப் பதிவு செய்யுங்கள்.
- உங்களிடம் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டின் நல்ல தரமான புகைப்படத்தை எடுத்து பதிவேற்றவும்.
- உங்கள் முகவரியை உள்ளிடவும். உங்கள் நோட்டை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- அவர்களிடம் பேரம் பேசி உங்கள் ரூபாய் நோட்டை நல்ல விலைக்கு விற்கலாம்.
எனினும் பழைய ரூபாய் விற்பனையைத் தொடர்வதற்கு முன், அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்ப்பதை உறுதிசெய்யவும். ஏதேனும் மோசடிகளுக்கு ஆளாகாமல் கவனம் இருப்பது அவசியம்.
விற்க முயற்சிக்கும் முன், செயல்பாட்டின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது மற்றும் அதில் உள்ள அனைத்து ஆபத்துகளையும் புரிந்துகொள்வது அவசியம்.
மேலும் ஆன்லைனில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.
Read More : வருமான வரிக்கான புதிய வரம்பு நிர்ணயம்!. ரூ.10,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிப்பு!