fbpx

உங்களுக்கு BP இருக்கிறதா..? பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு!… தவிர்ப்பது எப்படி..

ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகள், உப்புக் குறைந்த உணவு, மது, புகையை தவிர்ப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் பக்கவாதம் ஏற்படமால் வாழலாம்.

BP எனும் ரத்த அழுத்தம் தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு காரணம். ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சுமார் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சகஜமான நிலையில் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே பக்கவாதத்தை பொறுத்த வரை வரும் முன் காத்துக்கொள்வதே சிறந்தது. பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் ரத்தம் தடைபட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும்.

பக்கவாதத்திலிருந்து மீண்டு வர முதலில் பக்கவாதத்தின் அறிகுறிகளை புரிந்துக் கொள்வதும், அறிகுறிகளை உணரும்போது துரிதமாக செயல்படுவதும் தான் முக்கியம். பக்கவாதம் ஏற்பட்டால் உடல் சமநிலையை இழக்கும். ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு, முகம் ஒரு புறமாக இழுப்பது, ஒருபக்க கை, கால் செயல்பட இயலாதது, பேச்சில் குளறுதல், இவற்றை உணர்ந்தால் உடனடியாக அருகே இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ, பெரிய மருத்துவமனைக்கோ சென்று விட வேண்டும். சில மணி நேரங்களுக்குள் சென்றால் மூளையை மூளையை செயல்பட வைக்கும் ஊசி செலுத்தி உடல் குறைபாடுகளின்றி தப்பிக்கலாம்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் சாப்பாட்டில் உப்பை தவிருங்கள், நொறுக்குத் தீனியை விட்டு விடுங்கள் சர்க்கரையை குறைத்துக்கொள்ளுங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள். உயர் கொழுப்பு கண்டறியப்பட்டால் ரத்த நாளங்களில் படிந்து, ரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்யும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அசைவ உணவை இரவில் தவிருங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், அளவோடு சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு உட்கொள்ளுங்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் கூடுதல் உள்ளது. அதே போல் புகைப்பிடித்தல், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்தும், ரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கும், ரத்தத்தின் திரவத் தன்மையை அதிகரிக்கும். எனவே புகைப்பிடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்திவிடுங்கள்.

Kokila

Next Post

ஆண்கள் மலட்டுத் தன்மைக்கு ஒரே தீர்வு!… தினமும் வெற்றிலை சாப்பிடுங்கள்!

Wed Aug 16 , 2023
அதிகரித்துவரும் ஆண்கள் மலட்டுத் தன்மைக்கு வெற்றிலை தீர்வாக உள்ளது என்றுகூறினால் நம்புவீர்களா?… ஆனால் அதுதான் உண்மை. விரிவாக பார்க்கலம். தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள், வெற்றிலையின் மகத்துவத்தை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது. தற்போது தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்களை அதிகரிப்பதை தற்போது பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு தீர்வாக உள்ளது வெற்றிலை. எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். […]

You May Like