fbpx

உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்கிறதா? ஸ்பைடர் வெப் நன்மையா தீமையா?

நம் வீட்டில் பொருட்களை எப்படி அமைப்பது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீடு சுத்தமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்ற வாஸ்து விதியும் உள்ளது. அதே நேரம் வீட்டில் சிலந்தி வலைகள் அதிகமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களிடையே பல பிரச்னைகள் ஏற்படும். மேலும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் செய்யக்கூடிய வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். சோம்பல், எரிச்சல் மனநிலை ஏற்படும் என வாஸ்து சொல்லப்படுகிறது.

படுக்கை அறையில் சிலந்தி வலைகள் : படுக்கை அறையில் சிலந்தி வலைகள் இருந்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், திருமண வாழ்வில் பிரச்னைகள் சந்திக்க நேரிடும்.

வீட்டில் சிலந்தி வலைகள்: வீட்டில் சிலந்தி வலைகள் இருப்பின் குடும்பத்தில் நிதிநிலை அழுத்தங்கள் ஏற்படும். திடீர் செலவுகளும், படிப்படியாக பணத்தை இழக்கவும் நேரிடும் என நம்பப்படுகிறது.

பூஜை அறையில் சிலந்தி வலைகள்: உங்கள் வீட்டின் பூஜை அறையில் சிலந்தி வலைகள் ஏற்படாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். கடவுள் படங்களில் இடையே சிலந்தி வலை பின்னுவது துரதிருஷ்டவசமானது. இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். அதனால் பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

சமையல் அறையில் சிலந்தி வலைகள்: சமையலறையில் சிலந்தி வலை பின்னுவது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் ஒரு உடல் நலக் கோளாறு சந்திக்க நேரிடும். இதன் காரணமாக சமையலறையில் குறிப்பாக அடுப்பிற்கு மேல் சிலந்தி வலை பின்னாதவாறு அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்கவும்.

வாஸ்து குறைபாடு: வீட்டில் உள்ள சிலந்தி வலையானது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பண பற்றாக்குறையும், குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதனால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதோடு, சிலந்தி வலைகளை உடனடியாக அகற்றுவது நன்மை பயக்கும்.

Read more ; #ComeBackIndian பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுக்கிறாரா கமல்..? – ரசிகர்கள் உற்சாகம்

English Summary

Do you have cobwebs in your house? Spider web good or bad?

Next Post

கனமழை எதிரொலி...! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு...!

Wed Nov 27 , 2024
All Annamalai University exams postponed

You May Like