fbpx

அடிக்கடி தலைவலியா..? உடனே செக் பண்ணுங்க..!! நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்..!!

நுரையீரல் என்பது மார்பில் உள்ள இரண்டு பஞ்சு போன்ற உறுப்புகள். சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் உறுப்பும் இதுதான். மேலும், உடலில் இருந்து கார்பன் டை- ஆக்ஸைடை வெளியிடுகின்றன. நுரையீரல் புற்றுநோய் என்பது உங்கள் நுரையீரலில் கட்டுப்பாடற்ற செல் பிரிவினால் ஏற்படும் ஒரு நோய். உங்கள் செல்கள் பிரிக்கப்பட்டு அதன் இயல்பான செயல்பாட்டின் ஒரு பகுதியாக அதிகமான நகல்களை அங்கு உருவாக்குகின்றன. இதனால் அவை அதிகமாக உருவாக்கி கொள்கிறது. இந்த சேதமடைந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டிகளாக உருவாகின்றன. படிப்படியாக நுரையீரல் உறுப்புகளை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றன.

உடல் எடை குறைவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். நாள்பட்ட இருமல் இருக்கலாம். இருமலின் போது, சளியின் போது இரத்தம் வரலாம். மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கலாம். தலைச்சுற்றல் ( புற்றுநோய் மற்ற இடங்களுக்கு பரவும் போது மூளைக்கும் பரவும் போது தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, வலிப்புகள் போன்றவை வரலாம்). அறிகுறிகள் கண்டதும் சிடி ஸ்கேன் அல்லது (chest X-ray) மார்பு எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.

இதில், ஓரளவு முடிவு வரும் என்றாலும் இது இறுதி முடிவு அல்ல. கூடுதலாக PET/CT பரிசோதனை செய்யப்படும். இது இரண்டு வகைகளில் உதவலாம். இந்த பரிசோதனையில் உடலில் எந்த இடங்களில் பரவி உள்ளது என்பதை கண்டறிந்துவிட முடியும். இது பாதுகாப்பான முறை தான். இம்முறையில் கண்டறிந்தாலும் இதை மட்டும் கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது.

நுரையீரல் புற்றுநோய் தவிர்ப்பது எப்படி?

காற்று மாசு, இராசயன மாசு, தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புகைமூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடுவதோ, உடற்பயிற்சி செய்வதோ கூடாது. தற்போது வாகன புகையால் உண்டாகும் காற்று மாசு படுவதை தடுக்க நவீன பேட்டரி வாகனங்கள் பெரு நகரங்களில் மெட்ரோ போன்றவை வருவது மாசுவால் நுரையீரல் பாதிப்பை தடுக்க உதவும். புகைப்பழக்கம் மிக மிக மோசமானது அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பவர்களோடு அருகில் அதை சுவாசிப்பவர்களுக்கும் அந்த ஆபத்து அதிகம் என்பதால் இதை தவிர்ப்பது பாதுகாப்பானது.

Read More : மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்ட அமெரிக்கா..!! ஆடிப்போன உலக நாடுகள்..!! அதிபர் டிரம்பின் தடாலடி அறிவிப்பு..!!

English Summary

Lung cancer is a disease caused by uncontrolled cell division in your lungs.

Chella

Next Post

டங்ஸ்டன் ஏலம் ரத்து... மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பிரம்மாண்டமான பாராட்டு விழா...!

Sun Jan 26 , 2025
Tungsten auction cancelled... A grand felicitation ceremony for Chief Minister Stalin in Madurai today

You May Like