fbpx

’உங்களுக்கு அஜீரண கோளாறா’..? ’இந்த மருந்தை கையில் கூட தொடாதீங்க’..!! அரசு எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் அசௌகரியம் இருந்தாலும் நாம் உடனே ஒரு ஸ்பூன் டைஜின் எடுத்து குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த மருந்தில் அமில எதிர்ப்பு பண்பு இருக்கிறது.

எனவே இதை வாங்கி பலரும் குடிக்கின்றனர். ஆனால், அதுபோல் வாங்கி குடிக்க வேண்டாம் என்று அரசு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, வித்தியாசமான வாசனை கொண்டிருக்கும் இந்த டைஜின் டானிக் பிங்க் நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும்.

ஆனால், இது சமீபத்தில் வெள்ளை நிறத்தில் வருகிறது. சற்று கசப்பு தன்மை கொண்டதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. புதினா, ஆரஞ்சு போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுகின்றன. மருத்துவர்கள் இது போன்ற மருந்துகளை தங்களிடம் வருபவர்களுக்கு பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இது போன்ற மருந்துகள் குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Chella

Next Post

ரத்தாகும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! காரணம் என்ன..?

Fri Sep 8 , 2023
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மாற்று தேதியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் சூப்பர் 4 சுற்று ஆட்டம் செப்.10 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையின் கொழும்புவில் 90% மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் போட்டி தடைபட வாய்ப்புள்ளது. எனவே, அன்றைய தினம் போட்டியானது […]

You May Like