fbpx

உங்கள் கடை, நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா..? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, புதிதாக துவங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை https://labour.tn.gov.in என்ற இணையத்தில் பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.

விண்ணப்பம் பெறப்பட்ட, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் படிவம் Z-ல் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதுபற்றி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 2024 ஜூலை 2ஆம் தேதிக்கு பிறகு புதிதாக தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ள உரிமையாளர்கள் தொழிலாளர் துறையின்
https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 2024 ஜூலை 2ஆம் தேதிக்கு முன் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு கட்டணமின்றி இணையவழி முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, திருத்தங்கள் மேற்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வீடு வீடாக வரப்போகுது..!! இனி எல்லாமே ஈசி தான்..!! இத்தனை வசதிகளா..? மின்சாரத்துறை அதிரடி..!!

English Summary

Hiring 10 or more employees can apply at the e -mail address without registration fees.

Chella

Next Post

இது மட்டும் நடந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயரும்..!! பெண்களுக்கு செம குட் நியூஸ்..!!

Sat Sep 28 , 2024
The DMK government has been implementing a monthly provision of Rs.

You May Like