பொதுவாகவே, மலச்சிக்கல் என்பது மோசமான உணவுப்பழக்கம், சீரழிந்து வரும் வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது மிக முக்கியமான செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது குடலில் குவிந்து, குடல் அழுகத் தொடங்கிவிடும். குடலைப் பொறுத்தவரை இரண்டு வகையான குடல்கள் இருக்கின்றன. சிறுகுடல், மற்றொன்று பெருங்குடல். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு குடல் வறண்டு, குடல் வலுவிழக்கத் தொடங்கும்.
குடல் பலவீனமாகும்போது, வயிற்றில் வாயு மற்றும் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை அல்லது அதிகரித்த பசி, வயிற்று வலி அல்லது பிடிப்புகள், தோல் பிரச்சனைகள், மனநிலை மாற்றம், தூக்கமின்மை போன்ற சில அறிகுறிகள் தென்படும். அஜீரணத்திற்கு காரணம் குடலில் மலம், கழிவுகள் குவிந்து, அதன் காரணமாக குடல் பலவீனமடைகிறது. இது குறித்து கவனம் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிரச்சனைகள் ஏற்படும்.
உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?
* உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவை மாற்ற வேண்டும். உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். முழு தானியங்களிலும் நார்ச்சத்து உள்ளதால், அவற்றையும் சாப்பிடலாம்.
* உங்கள் உணவில் புரோபயாடிக் உணவுகளை உட்கொள்ளுங்கள். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். தயிர், தயிர் லஸ்ஸி, கிம்ச்சி, ஈஸ்ட் மற்றும் புளித்த உணவுகளை உட்கொள்ளலாம்.
* உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் குணமாகி குடல் ஆரோக்கியம் இருக்கும்.
* உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை நீக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நடைபயிற்சி, யோகா, சைக்கிள் போன்றவற்றை செய்யலாம்.
* அதிக மன அழுத்தத்தில் இருப்பது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
* சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் பசியுடன் இருக்கக் கூடாது. காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் குடல் பிரச்சனைகள் மற்றும் செரிமானம் பாதிக்கப்படும்.
* உணவை மெதுவாக சாப்பிட்டு நன்றாக மென்று சாப்பிடுங்கள். இது வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரண பிரச்சனைகளை குறைக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரவில் 7-8 மணி நேரம் முழு தூக்கம் பெற வேண்டும். போதுமான தூக்கம் குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
Read More : புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் விரிசலா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே இதை பண்ணுங்க..!!